முத்தரையர் கல்விப் பரிசளிப்பு விழா

வெள்ளி, 17 ஜூன், 2011

                       புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் சங்கம் ஒவ்வொரு வருடமும் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமனாதபுரம் மாவட்ட முத்தரையர் மாணவர்களுக்காக கல்விப் பரிசு வழங்குகிறது. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புகளில் 80% மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன.
                     தகுதிப் பெற்ற மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியல் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை "இரா.திருமலைநம்பி, திருமலைராயசமுத்திரம், கைக்குறிச்சி அஞ்சல், திருவரங்குளம் வழி புதுக்கோட்டை மாவட்டம்" என்ற் முகவரிக்கு ஜூன் மாதம் 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
                   இந்த வருடம் எதிர் வரும் 15-08-2011-ல் இந்த பரிசளிப்பு விழா நடக்க இருப்ப்தாக புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் சங்கம் அறிவித்துள்ளது. இது இந்த சங்கம் நடத்தும் இருபதாவது ஆண்டு பரிசளிப்பு விழாவாகும். இந்தப் பணி தொடரவும், விழா சிறக்கவும் எமது வாழ்த்துக்கள். 

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சமூக, கல்வி, பண்பாட்டுத் திங்கள் இதழ்

வெள்ளி, 10 ஜூன், 2011

                                      முத்தரையர் சமூகத்தைப் பற்றியும் அவர்களின் தற்போதைய நிலை பற்றியும் மிக விரிவாகவும் தெளிவாகவும் மக்களிடையே எடுத்துச் சொல்லி வருகிறது " பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சமூக, கல்வி, பண்பாட்டுத் திங்கள் இதழ்". இந்த இதழ் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வெளிவருகிறது.
                                       இந்த இதழின் ஆசிரியர் திரு இரா. திருமலைநம்பி அவர்களும் இதன் பதிப்பாசிரியர் திரு பு.சி.தமிழசரசன் அவர்களும் இந்த சமுதாய மக்களுக்காக பல காலமாக உழைத்து வருகிறார்கள்
                                     மாவட்ட சங்கத்தின் மூலமாக வெளிவரும் இந்த இதழ் முத்தரையர் சமுதாய மக்களின் தற்போதைய கல்வி, பொருளாதாரம், அரசியல் நிலைப் பற்றி ஒவ்வொரு மாதமும் விரிவாக தொகுத்தளிக்கிறது. இம்மக்களுக்காக உழைத்த பெருந்தகையாள்ர்களைப் பற்றியும், தற்போது தொண்டாற்றி வரும் தலைவர்கள் பற்றியும் படங்களுடன் செய்திகளை வெளியிடுகிறது.